தமிழகத்தில் நாளை (பிப்…19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வார்டுகளில் தங்கி இருந்த வெளி ஆட்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு தமிழகம் முழுவதும் விடிய விடிய லாட்ஜூகள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபம் போன்ற இடங்களில் காவல்த்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி சென்னையில் திருவல்லிக்கேணி, எழும்பூர், பெரியமேடு, கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் காவல்துறையினர் லாட்ஜ் வரவேற்பு அறைகளிலுள்ள பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு அங்கு யார், யார் தங்கி உள்ளனர்..? எதற்காக வெளியூர்களில் இருந்து அவர்கள் வந்துள்ளனர்..? என்பது தொடர்பாக லாட்ஜ் உரிமையாளர்களிடம் கேட்டறிந்தனர். இதையடுத்து லாட்ஜூகளில் தங்கி இருப்பவர்களின் அறைகளுக்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.