மின்சார கார் வைத்திருப்பவர்களுக்கு பிபிசிஎல் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் 10 சார்ஜ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒவ்வொரு 100 கிலோ மீட்டருக்கும் இடையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கிலோ வாட் அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என பிபிசிஎல் செய்தி தொடர்பாளர் கூறினார். இதன் காரணமாக இனி சென்னையிலிருந்து மதுரைக்கு மின்சார வாகனங்களில் பயமில்லாமல் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மின்சார வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..