Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 158 மனுக்கள்…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. ஆட்சியரின் ஆய்வு….!!

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றதில் 158 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டை வேண்டி 27 மனுக்களும், ஸ்மார்ட் கார்டு வேண்டி 101 மனுக்களும், இருசக்கர வாகனதிற்கு 7 மனுக்களும், மனவளர்ச்சி குன்றியோருக்கான மாத உதவித் தொகை 1,500 ரூபாய் வழங்க வேண்டி 23 மனுக்களும், ஊன்றுகோல், சக்கர நாற்காலி, வங்கிக்கடன், வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க கோரியும் மொத்தமாக 150 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து தகுதி உடைய நபர்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பின்னவாரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகின்ற மழைநீர் சேகரிப்பு மற்றும் 100 நாள் திட்ட வேலையின் கீழ் செயல்படும் பணிகள், ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி ஆகிய இடங்களில் கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். மேலும் இக்கிராமத்தில் இருளர் இன மக்களின் குடியிருப்பு பகுதிக்கு சென்று அவர்களுடைய வாழ்வாதாரம் குறித்து கலெக்டர் கேட்டறிந்துள்ளார்.

Categories

Tech |