ஈரானில் மூன்று மாடி கட்டிடம் இடித்து விழுந்ததில் 9 பேர் பலி.
ஈரான் நாட்டின் தெஹ்ரான் தலைநகரின் தென்மேற்கே அமைந்துள்ள ரோபட் கரீம் என்ற பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. மூன்று அடுக்குகள் கொண்ட இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து கட்டிடத்தின் வாயு கசிவு மற்றும் ஹீட்டர் வெடித்ததால் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு பத்திரிகையாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.