வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் முனியசாமி-பாண்டியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் வெளியூரில் வேலை பார்க்கும் மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். இதனையடுத்து திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் 3 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து முனியசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.