மாளவிகா மோகனன் நடிகர் விஜயுடன் காதல் திரைப்படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் பேட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். மேலும் விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
இந்நிலையில் மாளவிகா மோகன் தனது ரசிகர்களுடன் சமூகவலைத்தளத்தில் கலந்துரையாடினார். அதில் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் ஒரு ரசிகர் விஜயுடன் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எந்த மாதிரி நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். சமீபகாலமாக அவர் காதல் படங்களில் நடிக்கவில்லை விஜய் மீண்டும் ஒரு காதல் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம் அந்த படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்க ஆசையாக இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் தனுஷ் ரசிகர்கள் கேட்டதற்கு அவர் சிறந்த வழிகாட்டி எனவும், அவரிடம் நிறைய நடிப்பை கற்றுக்கொண்டேன் எனவும் கூறியுள்ளார்.