பாகிஸ்தானுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்ட பில் கேட்ஸுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி விருது வழங்கி சிறப்பித்துள்ளார்.
உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ். இவர் பாகிஸ்தானுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசினார். பில்கேட்ஸ் பாகிஸ்தான் அரசை கொரோனா பரவலை தடுக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டியுள்ளார். இதனை தொடர்ந்து இம்ரான்கானன் பில் கேட்ஸுக்கு மத்திய விருது அளித்து கவுரவித்தார்.
மேலும் பாகிஸ்தான் நாட்டில் பில் கேட்ஸை பாராட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பில் கேட்ஸ் வறுமை ஒழிப்புக்காகவும், மக்களின் ஆரோக்கியம் காக்கவும் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டி ‘ஹிலால் இ பாகிஸ்தான்’ என்ற விருது வழங்கி பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அவரை சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு பிரமுகர்கள் மற்றும் பாகிஸ்தான் மத்திய மந்திரிகளும் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பில் கேட்ஸை பாகிஸ்தானுக்கு இம்ரான் கான் அழைத்த காரணத்தினாலேயே சென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.