இஸ்ரேல் விவசாயியின் 289 கிராம் எடையுள்ள எலன் வகை பழம் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
ஜப்பானை சேர்ந்த விவசாயி ஒருவர் ஸ்ட்ராபெர்ரி பழங்களை விளைவித்து இருக்கிறார். இந்த விளைச்சலில் 250 கிராம் எடை கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழமே இதற்கு முன் உலகின் அதிக எடை கொண்ட பழமாக இருந்துள்ளது. தற்பொழுது அந்த சாதனையை முறியடித்து இஸ்ரேல் விவசாயியின் 289 கிராம் எடையுள்ள எலன் வகை பழம் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
மேலும் 289 கிராம் எடையுள்ள எலன் வகை பழம் சாதாரணமாக விளையக்கூடிய பழங்களை விட ஐந்து மடங்கு எடையுடன் விளைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.