இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் தூசூர் பகுதியில் சதீஷ்குமார் (வயது 35) என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருந்த மற்றொரு இருசக்கர வாகனம் சதீஷ்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சதீஷ்குமாரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.