கர்நாடகா: சாமராஜ்நகரில் சிகரெட்டுக்காக அண்ணன் – தம்பி சண்டையிட்டதில் கொலையில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் சாமராஜ்நகர் மாவட்டத்தில் மதுவனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் சித்தப்பாசுவாமி(42). இவர் குடிபோதையில் தனது தம்பி பிசாலசுவாமியிடம் (22) சிகரெட் கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. கோபத்தில் பிசாலசுவாமி, தனது அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய தம்பியை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.