அர்ஜென்டினாவில் காட்டுத்தீ ஏற்பட்டு சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் நிலங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன.
வடக்கு அர்ஜென்டினாவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இது கொரியன்டெஷில் உள்ள மலைப்பகுதியில் பரவியுள்ளது. இந்த தீ அதிவேகமாக பரவியதில் சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் நிலங்கள் எரிந்து சாம்பலாயின. குறிப்பாக அப்பகுதியில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 6 சதவீதம் தீயில்கருகி நாசமானது. இந்த காட்டு தீயானது வறண்ட கால நிலையின் காரணமாக ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.