Categories
மாநில செய்திகள்

புதிய அணை கட்ட கேரளா முயற்சி…. எதிர்க்கும் தமிழக அரசு…. அமைச்சர் துரைமுருகன்…..!!!!!!

கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்து இருப்பதை ஏற்க முடியாது என்றும் தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் அரசு விட்டுக் கொடுக்காது என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று கேரள ஆளுநர் உரையில் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து புதிய அணை கட்டுவதற்கு முயற்சி செய்யும் கேரளாவின் திட்டத்தை எல்லா விதத்திலும் தமிழக அரசு எதிர்க்கும். ஆகவே கேரள ஆளுநரின் பேச்சு உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு முரணானது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்..

Categories

Tech |