தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டாரம் பகுதியில் தொழிலாளியான விவேக் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவேக் கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த விவேக் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த விவேக்கை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விவேக் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.