பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சியில் இருக்கும் 147 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இதற்காக 200 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 54 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.
இதனையடுத்து தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் கூடுதல் காவல்துறை சூப்பிரண்டுகள் 7 பேரும் மற்றும் காவல்துறையினர் உள்பட 1,000 பேர் ஈடுபட உள்ளனர். மேலும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் 5 காவல்துறையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.