வீட்டில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்திய போது 330 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் அதே ஊரில் வசிக்கும் சுரேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.