Categories
சினிமா

மூத்த நடிகையுடன் லஞ்ச் சாப்பிட்ட ‘ராஜமாதா சிவகாமி’…. இணையத்தில் வைரலாகும் போட்டோ….!!!

நடிகை ரம்யா கிருஷ்ணன் மூத்த நடிகை சவுகார் ஜானகி உடன் உணவருந்திய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரம்யாகிருஷ்ணன். இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். இவர் பாலிவுட்டிலும் நடித்திருக்கின்றார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் மூத்த நடிகை சவுகார் ஜானகியுடன் உணவருந்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இப்புகைப்படத்தில் ரம்யா சவுகார் ஜானகியை அணைத்தவாறு முத்தமிட்டுள்ளார். புகைப்படத்தைப் பதிவிட்டதோடு விருந்தை சவுகார் ஜானகியே சமைத்துள்ளார், இது மிகவும் சுவையாக உள்ளது என குறிப்பிட்டிருந்தார். இப்புகைப்படமானது தற்போது வைரலாகி வருகின்றது.

Categories

Tech |