அரசு கேட்டுக்கொண்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி மீது தாக்குதல் நடத்த தயார் என்று புதிய தலைமை தளபதி நவரானே தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து பேசிய புதிய ராணுவ தலைமை தளபதி, எல்லையில் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் இருப்பதையும் ஊடுருவல் நடக்காமல் இருப்பதையும் ராணுவம் உறுதி செய்து வருவதாக அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு.
காஷ்மீரில் ராணுவம் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ராணுவத்திடம் ஏராளமான திட்டங்கள் உள்ளதாகவும் அரசு கேட்டுக்கொண்டால் அவற்றை நடைமுறைப்படுத்தவும் தயார் என்று அவர் பதிலளித்தார். ராணுவ தலைமை தளபதியாக பதவி ஏற்றவுடன் அளித்த முதல் பேட்டியிலும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் உரிமை இந்தியாவிற்கு இருப்பதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.