Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்புகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கடந்த வருடம் கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கடந்த ஆண்டு இறுதியில் டிஎன்பிஎஸ்சி இந்த வருடத்துக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதையடுத்து தற்போது கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருப்பதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயது உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இதற்கு எம்ஏ(கூட்டுறவு) அல்லது எம்காம், எம்காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவில் டிப்ளோமா (அல்லது) ஐசிஏஐ உள்ளிட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இந்த பணியில் நியமிக்க தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணியிடத்திற்கான மாதம் சம்பளமாக ரூபாய் 56,100 முதல் ரூபாய் 1,77,500 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள முகவரிக்கு சென்று 21ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

அதன்பின் இதில் நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதனை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 150 வசூலிக்கப்படுகிறது. இதனிடையில் நிரந்தர பதிவு வைத்திருப்பவர்களிடம் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இப்பணிக்கான எழுத்து தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி அன்று காலை முதல் தாள் மற்றும் மதியம் இரண்டாம் தாள் நடைபெறும். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை பெற https://www.tnpsc.gov.in/Document/english/2022_02_AD_Cooperative%20Audit_Eng.pdf என்ற இணைப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |