Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்று (பிப்…19) ….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 3 வருடங்களுக்கு பின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. அந்த வகையில் தமிழக முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக இன்று (பிப்…19) தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்கான முடிவுகள் வரும் 22ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அதன் பின்பு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலுக்கான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பிரச்சாரங்கள் பிப்…17 மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க ஏதுவாக இன்று (பிப்..19)ம் தேதி அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்துமென தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்று (பிப்..19) ஆம் தேதி அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்க வேண்டும். இந்த விதியை மீறி இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநகர் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பணியாளர்களுக்கும் இன்று(பிப்…19) பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. இந்த பொது விடுமுறையானது வாக்களிப்பு ஆரம்பமான நேரத்தில் இருந்து முடியும் நேரம் வரையில் மட்டுமே பொருந்தும் எனவும் மாநகர போக்குவரத்து கழகம் ஒரு பொது சேவை நிறுவனம் என்பதால் வாக்குரிமை உள்ள அனைவரும் அந்தந்த கிளை மேலாளரிடம் முன்பே தெரிவித்து செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படும். ஆகவே போக்குவரத்து பொது சேவைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பணியாளர்கள் பணிபுரிய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |