சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 480 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள சோளியக்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் காவல்துறையினர் சோளியக்குடிக்கு சேனூர் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கடையினர் பின்புறம் பெட்டி பெட்டியாக பதுக்கி வைத்திருந்த 480 மது பட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அதை வைத்திருந்த முகில்தகம் பெரிய குடியிருப்பில் வசிக்கும் காளிமுத்து என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 12 ஆயிரம் ரூபாய், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.