காசி விஸ்வநாதர்- விசாலாட்சி அம்மனுக்கு தெப்பத்திருவிழா நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் -விசாலாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மகா திருவிழாவை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற திருவிழாவில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மனுக்கு வெப்பத்தின் கரைகளில் அமைக்கப்பட்ட மதில் சுவரில் அகல் விளக்குகளில் தீபமேற்றி வழிபாடு செய்தனர்.
அதன் பின்னர் காசி விஸ்வநாதர்- விசாலாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க விஸ்வநாதர்- விசாலாக்ஷி அம்மாள் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்.