கிரீஸ் நாட்டிலிருந்து சுமார் 288 நபர்களுடன் யூரோபெரி ஒலிம்பியா என்ற உல்லாச கப்பலானது திடீரென்று தீ பற்றி எரிந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரீஸ் நாட்டிலிருந்து மத்திய தரை கடலில் உள்ள அயோனியன் கடலின் வழியே யூரோபெரி ஒலிம்பியா என்னும் உல்லாச கப்பலானது, இத்தாலி நாட்டிற்கு சென்றது. அதில் மொத்தமாக சுமார் 288 நபர்கள் பயணம் மேற்கொண்டனர். அப்போது, 4:30 மணிக்கு கிரீஸ் மற்றும் அல்பேனியா நாடுகளுக்கு இடையில் இருக்கும் கோர்பு தீவிற்கு அருகே சென்ற கப்பலில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.
எனவே உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர், கப்பலில் இருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர். அதன்பின்பு, அவர்களை அருகே இருக்கும் கோர்பு தீவிற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர். தற்போது தீ விபத்திற்கான காரணம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.