Categories
சினிமா

“வலிமை படத்துல இம்புட்டு விஷயம் இருக்கா”….? அப்போ ரசிகர்களுக்கு பல விருந்து இருக்கு…. செம கொண்டாட்டம் தான்….!!!

அஜித்தின் வலிமை திரைப்படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை H.வினோத் இயக்குகின்றார் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். இத்திரைப்படம் மூன்று ஆண்டுகளாக எடுக்கப்பட்டு தற்பொழுது வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி ரிலீசாக உள்ளது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் அஜித்தின் திரைப்படம் எதுவும் வெளியாகாதால் ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளார்கள்.

இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், கிலிம்ஸ் உள்ளிட்டவற்றை பார்த்த ரசிகர்கள் இது ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என கருதினார்கள். இந்நிலையில் இயக்குனர் வினோத் இத்திரைப்படத்தில் ஆக்ஷனை தவிர்த்து எமோஷனல் காட்சிகள் அதிகம் இருக்கும் என கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் அஜீத் இதுவரை செய்யாத ஒன்றை செய்துள்ளார் என கூறி இருக்கின்றார்.

Categories

Tech |