‘முசாசி’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது இவர் பஹீரா, பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்குகிறார். ”முசாசி” என பெயரிடப்பட்ட இந்த படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விடிவி கணேஷ், மாஸ்டர் மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஜப்பானிய போர் வீரரான முசாஷியின் பெயரை இந்த படத்திற்கு வைத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Here is the exciting first look of @PDdancing's #Musasi, Directed by debutant @samrodrigues23, Produced by #JohnBritto of #JoyFilmBoxEntertainment.#MusasiFirstLook @Actor_Mahendran #JohnVijay @prasad_sn_ #Vignesh #VTVGanesh #Binupappu @editoranthony @proyuvraaj pic.twitter.com/PquDg8GQ5B
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 17, 2022