வாக்கு பதிவு மையத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேசன் அதிரடி ஆய்வு செய்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர் விஜயராஜ், தாசில்தார் கோவிந்தராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திர பாபு, தேரூர் பேரூராட்சி அலுவலர் ஜெயந்தி, உதவி அலுவலர் மணி, சூசைராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முருகேசன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று இயந்திரங்கள் சரியாக உள்ளதா பணிகள் சரியாக நடக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்துள்ளார்.