Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருவிழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின் போது மாடு முட்டியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி கிராமத்தில் புகழ்பெற்ற பெரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 2 கோவில் மாடுகள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 14 வட மாடுகள் கலந்து கொண்டது.

இந்நிலையில் மாடு முட்டியதால் சந்துரு என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து படுகாயமடைந்த சந்துருவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சந்துரு பரிதாபமாக இறந்துவிட்டார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |