மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெம்மேலி கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமார் திருப்புதல் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அந்த மாணவி கண்டித்துள்ளார். ஆனாலும் ராஜ்குமார் தொடர்ந்து அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டிற்கு சென்று நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.