தனுஷ் நடிக்கும் “மாறன்” திரைப்படத்தின் இரண்டாவது பாடல் பிப்ரவரி-19 வெளியாக இருக்கின்றது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்பொழுது திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிஸியாக உள்ளார். கூடிய விரைவில் மாறன் திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இது ஓடிடியில் வெளியாக உள்ளது. மேலும் தனுஷின் திரைப்படங்கள் அண்மைகாலமாக ஓடிடியில் வெளியாவது தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
My next single … The heart-warming second single #AnnanaThaalaattum from #Maaran is releasing tomorrow ! #Maaran coming soon on @disneyplusHSTam @dhanushkraja @karthicknaren_M @Lyricist_Vivek @MalavikaM_ @smruthi_venkat@SathyaJyothi@thondankani @LahariMusic @DisneyPlusHS pic.twitter.com/GsTFvX5Hgd
— G.V.Prakash Kumar (@gvprakash) February 18, 2022
இந்நிலையில் மாறன் திரைப்படத்தின் முதல் பாடல் ஜிவிபிரகாஷ் இசையில் வெளியாகி ஹிட்டான நிலையில் தற்போது அண்ணனா தாலாட்டும் எனும் பாடல் செகண்ட் சிங்கிளாக பிப்ரவரி 19 வெளியாக இருக்கின்றது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர். தனுஷ் நடிக்கும் திரைப்படத்தில் இதுவே முதல் அண்ணன்-தங்கை எமோஷனல் நிறைந்த திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.