Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ்…. போதை ஆசாமி மீது வழக்குப்பதிவு…. கோவையில் பரபரப்பு….!!

ஆம்புலன்ஸை ஒட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக புறப்பட்டுள்ளது. அந்த ஆம்புலன்ஸ் லங்கா கார்னர் பாலத்தை கடந்து குட்செட் ரோட்டில் வேகமாக திரும்ப முயன்றபோது போக்குவரத்து போலீசார் நோயாளிகளை மீட்க செல்வதாக நினைத்து நோ என்ட்ரி பகுதியில் அனுமதித்தார். இந்நிலையில் வேகமாக சென்ற ஆம்புலன்ஸ் கணவாய் பகுதியில் இருந்து ரயில் நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் மீது மோதி நின்றது. இதனையடுத்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் ஆம்புலன்ஸை ஓட்டி வந்தவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர் தனது பெயர் திலகர் என்று ஹிந்தி மொழியில் கூறியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது திலகர் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் நின்ற ஆம்புலன்சை பார்த்த திலகர் ஆம்புலன்ஸ் வேகமாக ஓட்டிச்சென்று அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். போதைப் பழக்கம் காரணமாக திலருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |