வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வன் தனது உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செல்வன் அதிர்ச்சி அடைந்தார்.
அதன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து செல்வன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.