Categories
சினிமா

அப்பாடி….! ஒருவழியாக ராசியான தனுஷ்-ரஜினி….. வெளியான சூப்பர் தகவல்….!!!

நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் மன வருத்தம் நீங்கி சமரசமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் இயக்குனர் ஐஸ்வர்யாவை 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி 17 பிரிவதாக அறிவித்தார்.  இவர்களுக்கு யாத்ரா லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் பிரிவதை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவின் மீது கடும் கோபத்தில் உள்ளார். மேலும் வீட்டில் இருக்கும் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்தார் ரஜினி. பிறகு இதில் இருந்து மீண்டுவருவதற்காக திரைப்படங்களில் கவனம் செலுத்த முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்த ரஜினி இறுதியாக இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் கதையை கேட்டுள்ளார். ரஜினிக்கு மிகவும் பிடித்தது.

இதனால் தலைவர் 169 திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கின்றார். தனுஷ் சிபாரிசு செய்த இயக்குனர் பால்கி இயக்கத்தில் தலைவர்-170 படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. தனுஷ் ஐஸ்வர்யா இணைவதற்கான  எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் தனுஷ்-ரஜினிகாந்த் மன வருத்தம் நீங்கி இருவரும் சமரசமாகி உள்ளதாக தகவல் வெளியாகின்றது. இந்நிலையில் தனுஷ் ஐஸ்வரியா சமரசமாகி மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |