பணப்பையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பெருநாட்டான்தோப்பு பிள்ளையார் கோவில் தெருவில் விவசாயியான ராமதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திட்டச்சேரி பேருந்து நிலையத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ.30,000-த்தை எடுத்து அங்கிருந்து கிளம்பியுள்ளார். பின்னர் வெளியே வந்து தனது இருசக்கர வாகனத்தில் அந்த பணப்பையை மாட்டிவிட்டு கிளம்பியுள்ளார்.
அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரது பணப்பையை திருடிக் கொண்டு தப்பித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து ராமதாஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.