Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடுமையான வயிற்று வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழையூர் ஒன்றியம் திருமணங்குடி மாதா கோவில் தெருவில் அகஸ்டின்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அகஸ்டின்ராஜ்  சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது அவர் கடுமையான வயிற்று வலியில் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலிலிருந்த அகஸ்டின்ராஜ் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் அருந்தி மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |