சீன அரசு அடுத்த 10 ஆண்டுகளுக்கு யாங்ட்சீ ஆற்றில் மீன்பிடிக்க தடை விதித்து உள்ளது.
சீன நாட்டின் பெரிய ஆறாக கருதப்படும் யாங்ட்சீ ஆற்றில் 1950களில் 4 லட்சத்து 20 ஆயிரம் டன் மீன்கள் அந்நாட்டு மீனவர்களால் பிடிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஒரு லட்சம் டன் மீன்கள் கூட ஓராண்டில் பிடிக்கப்படுவதில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மிக அதிகமான மீன் பிடித்ததால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு யாங்ட்சீ ஆற்றின் தன்மை காலப்போக்கில் மாறியதால் மீன்களின் வரத்து குறைந்து காணப்படுவதாக கண்டறியப்பட்டது. ஆகையால் மீண்டும் யாங்ட்சீ ஆற்றில் உயிர் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் அந்த ஆற்றில் பத்து ஆண்டுகளுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த தடையின் காரணமாக இரண்டு லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அந்நாட்டின் விவசாய மற்றும் மீன்வளத்துறை சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.