Categories
உலக செய்திகள்

NEWYEARSPECIAL……”10,000 தகவல்கள் பரிமாற்றம்” புதிய உலக சாதனை படைத்த வாட்ஸ்அப்…!!

புத்தாண்டு தினத்தையொட்டி வாட்ஸப்பில் 10,000 தகவல்கள் பரிமாற்றப்பட்டு புதிய சாதனையை அந்நிறுவனம் எட்டியுள்ளது.

முன்பெல்லாம் புதிய ஆண்டு பிறக்கப் போகிறது என்றால் கடிதங்கள் மூலம் வாழ்த்து செய்திகள் உறவினர்களுக்கு தெரிவிக்கப்படும். முகநூல் அறிமுகம் ஆனதையடுத்து இண்டர்நெட்டை பயன்படுத்தி அதில் வாழ்த்து செய்திகளை தெரிவித்து வந்தனர் மக்கள். தற்போது 10 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய வாட்ஸ்அப் மூலமே அதிகமான தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.

புத்தாண்டு தினத்தன்றும் அதேபோல் அதிகமான வாழ்த்துக்கள் வாட்ஸ்அப் மூலம் பரிமாறப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி ஒன்றாம் தேதி அன்று 24 மணி நேரத்தில் சுமார் 10 ஆயிரம் கோடி தகவல்கள் பரிமாறப்பட்ட தாகவும், நிறுவனம் தொடங்கிய 10 ஆண்டுகளில் இதுபோன்ற சாதனை நிகழ்ந்ததே இல்லை இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதில் 2000 கோடிக்கும் மேற்பட்டோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதும் இது உலக அளவில் ஐந்தில் ஒரு பங்கு என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |