Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு செம குட் நியூஸ்…!! தேவஸ்தானத்தின் புதிய அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் உள்ள தனியார் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு தேவஸ்தானத்தின் சார்பில் அன்னதானக் கூடங்கள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 2022-2023ஆம் ஆண்டுக்கு ரூ.3096.40 கோடியிலான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில் அவர் கூறியதாவது, “திருப்பதியில் வரும் நிதியாண்டில் 3096.40 கோடியில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு விரைவில் இலவச தரிசனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 230 கோடி ரூபாய் செலவில் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டப்படும் மேலும் திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட்கள் என அனைத்தும் மூடப்பட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக அன்னப் பிரசாதம் மட்டுமே வழங்கப்படும். ஏழை எளியவர்கள் முதல் அர்ச்சகர்கள் விஐபிகள் என அனைவரும் அன்னப் பிரசாதம் மட்டுமே திருப்பதியில் சாப்பிட முடியும்.!” எனக் கூறினார்.

Categories

Tech |