Categories
தேசிய செய்திகள்

பறவை காய்ச்சலா….? 25,000 பறவைகளை உடனே கொல்லுங்க…. அதிரடி உத்தரவு…!!!

மகாராஷ்டிராவில்  பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக  25,000 பறவைகளைக் கொல்ல அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் தானே மாவட்டத்தில் உள்ள வெஹ்லோலி என்னும்  கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு தனியார் கோழிப் பண்ணையில் சுமார் 100 கோழிகள் கொண்ட குழு இறந்ததை தொடர்ந்து சந்தேகம் தொடங்கியது. பறவை காய்ச்சலை உறுதி செய்வதற்காக அதன் மாதிரிகள் பூனேவில்  உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அணையில் உள்ள கோழிப் பண்ணையில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 25 ஆயிரம் பறவைகள் கொல்ல  தானே மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் ஜெ நர்வாகர்  உத்தரவிட்டுள்ளார்.

பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்த அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட விலங்குகள் பாதுகாப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.H5n1 வைரஸ்கள் தான் பறவைக்காய்ச்சல் ஏற்படுத்தியதாகவும்ஜில்லா பரிஷத் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர். பௌசாகேப் டாங்டேவும் உறுதிசெய்துள்ளனர்.  தானேயில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாநில மற்றும் கால்நடை பராமரிப்புக்கு மாவட்ட நிர்வாகம் தகவல்களை தெரிவித்துள்ளது.

Categories

Tech |