தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக மெட்ரோ ரயில் சேவையில் அதிவேக இலவச வை-பை வசதி டெல்லியில் கொண்டு வரப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையம் செல்லும் எக்ஸ்பிரஸ் லைன் வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையில் அதிவேக இலவச வைஃபை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. வளர்ந்த நாடுகளான சீனா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் மெட்ரோ ரயில் சேவையில் இலவச வைஃபை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
அதிலும் தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக இலவச வைஃபை மெட்ரோ சேவையில் அறிமுகப்படுத்திய நாடாக இந்தியா கருதப்படுகிறது. இந்த இலவச வைபை சேவையை டெல்லி மெட்ரோ தலைவர் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். மேலும் படிப்படியாக அனைத்து மெட்ரோ வழித்தடங்களிலும் இந்த இலவச வை-பை சேவை யானது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.