Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் மின்னணு எந்திர கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டுள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் வேட்டைக்காரன்புதூர் 14-வது வார்டு, திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி 24-வது வார்டில் எந்திர கோளாறு காரணமாகவும், நெல்லை மாவட்டத்தில் பணகுடி பகுதியில் உள்ள 10-ஆவது வார்டு ஏஜெண்டுகள் வராததாலும் வாக்குபதிவு இன்னும் தொடங்கவில்லை.

Categories

Tech |