தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இருப்பினும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா இல்லாததால் வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் இருக்கும் தேர்தல் அதிகாரிகளிடம் 17-B என்ற விண்ணப்பத்தை பெற்று யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று எழுதி கொடுக்கலாம். ஆனால் இப்படி செய்யும் போது வெளியில் இருக்கும் கட்சியினருக்கு தெரிந்துவிடும் என்பதால் எத்தனை பேர் இதை செய்வார்கள்..?