வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 1/2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சின்னசவுடம்மன் கோவில் தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போடி நகர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 1/2 லட்சம் மதிப்புள்ள சுமார் 600 புகையிலை பக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள வெங்கடேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.