தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க பொதுமக்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் வரிசையில் நின்றார். இதையடுத்து எஸ்ஐஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள், வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.