Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில்…. சினிமா பிரபலங்கள் வாக்களிக்கும் இடங்கள்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். சிவப்பு நிற காரில் ரசிகர்கள் படைசூழ நடிகர் விஜய் வாக்குச் சாவடியை வந்தடைந்த போது “அடுத்த முதல்வர் விஜய்” என்ற கோஷம் எழுப்பப்பட்டது. காரில் இருந்து இறங்கிய விஜய் அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் கூறிய பின் தனது வாக்கை செலுத்தினார்.

இதையடுத்து நடிகர் ரஜினி சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் வாக்குச்சாவடியில் வாக்களிக்க உள்ளார். நடிகர் அஜித்-ஷாலினி திருவான்மியூர், சூர்யா-ஜோதிகா குடும்பத்தினர் தி.நகரில் உள்ள இந்து சபா சமய வாக்குச்சாவடி, சிம்பு தி.நகர், சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளி, விஜய் சேதுபதி கோடம்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளி, தனுஷ் கோடம்பாக்கத்தில் உள்ள காமராஜர் காலனியில் வாக்களிக்க உள்ளனர்.

Categories

Tech |