Categories
மாநில செய்திகள்

“ரஜினிக்கு தான் என் முதல் ஓட்டு!”…. 30 ஆண்டுகளாக வாக்களிக்காமல் இருந்த நபர்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிக்காக 30 ஆண்டுகள் வாக்களிக்காமல் இருந்த மகேந்திரன் என்பவர் முதல் முறையாக வாக்களித்துள்ளார். புதுக்கோட்டை 22-ஆவது வார்டு ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்த இவர், ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் அவருக்கு தான் தன்னுடைய முதல் வாக்கை செலுத்த வேண்டும் என இருந்துள்ளார். ரஜினி அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்ததால் தற்போது திமுகவின் ஆட்சி நான் எதிர்பார்த்தது போன்று இருப்பதாக கூறி வாக்களித்துள்ளார்.

Categories

Tech |