Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள்…. எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார அமைப்பு…!!

கொரோனா  காரணமாக உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் திரும்ப  பெறப்படுவது குறித்து உலக சுகாதார அமைப்பின் நிர்வாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

உலகம் முழுவதும் கொரோனோ தொற்று  பரவல் குறைந்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இந்த தொற்று பரவ தொடங்கியதிலிருந்து பலமுறை உருமாறியதன் காரணமாக தற்போது மூன்றாம் அலை  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபகாலமாகஓமிக்ரான்  குறித்த ஆய்வுகள் விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயிருக்கு ஆபத்து இல்லை என கூறியது சற்று நிம்மதியாக இருந்தது.

உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டது. உலக சுகாதார அமைப்பு  நிலையத்தின் நிர்வாக இயக்குனர் மைக் ரியான்  வியாழக்கிழமை கூறுகையில் கட்டுப்பாடுகளை தளர்த்தி இயல்பு நிலைக்கு திரும்புவதற்காக “இந்த விருப்பத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.  ஆனால் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும் பட்சத்தில் தற்போது இந்த தொற்றுநோய் இன்னும் நீண்ட காலத்திற்கு தொடர வழிவகுக்கும் அதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் தளர்த்த மற்றும் அகற்றுவதற்கு அரசியல் அழுத்தம் இப்போது அதிகமாக உள்ளது என்று நான் நினைக்கிறேன்.

எல்லாவற்றையும் தூக்கி எறிவது எனக்கு பதட்டத்தை அளிக்கிறது கட்டுப்பாடுகள் கைவிடப்படும் போது இன்னொரு கொரோனா  வைரஸ் மக்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் சாதாரண சூழலை மீண்டும் கொண்டு வருவது என்பது மிகவும் கடினமாக இருக்கும்” என்றார்.

Categories

Tech |