தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தின் 12வது வார்டுக்கான வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க வந்த மகேஷ்குமார் என்பவர் அரைநிர்வாணமாக வந்ததால் காவல்துறையினர் அவரை அங்கிருந்து வெளியேற்றினர். நகை மதிப்பீட்டாளர் மற்றும் மாநில நகை மதிப்பீட்டாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ள இவர், தன்னை பணி நிரந்தரம் செய்யக்கோரி அரைநிர்வாணமாக வந்ததாக கூறியுள்ளார். மேலும் இவர் வைத்திருந்த பாதகையில வங்கி தங்க நகை கடன் மூலம் அதிக லாபம் ஈட்டுகிறது என குறிப்பிட்டிருந்தார்.