சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில்நேற்று (பிப்..18) கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 4742 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 16 உயர்ந்து ரூபாய் 37936 என விற்பனையானது. நேற்று 24 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5108 என்றும் ஒரு சவரன் ரூபாய் 40864 என்றும் விற்பனையாகி வந்தது. அதேபோன்று வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 68.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 68500 எனவும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்..19) 22 கேரட் ஆபரணத் தங்கத்தில் விலையானது சவரனுக்கு ரூபாய் 32 அதிகரித்துள்ளது. 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று ரூபாய் 4 அதிகரித்து ரூபாய் 4,733க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 37,864க்கு விற்பனை ஆகிறது. அதேபோன்று 1 கிராம் வெள்ளி ரூபாய் 64க்கு விற்பனை செய்யப்படுகிறது.