ஆளில்லாத வீட்டில் துணி பைகளில் கட்டி போடப்பட்டு இருந்த குரங்குகளை கிராம மக்கள் விடிவித்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் சாராபுரி மாகாணத்தில் ஆளில்லாத வீட்டிலிருந்து வரும் சத்தத்தை கிராம மக்கள் கவனித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த மக்கள் அங்கு நூற்றுக்கணக்கான குரங்குகள் தனித்தனி துணி பைகளில் வைத்து கட்டி போடப்பட்டு இருந்துள்ளன. இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அதிகாரிகள் வரும் வரை காத்திருக்காமல் குரங்குகளை அவிழ்த்து விட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டிருந்த 29 குரங்குகளை மீட்டு வன விலங்கு உயிரியல் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.