Categories
Uncategorized மாநில செய்திகள்

என்ன சொல்லனு தெரியல….. ”கனவில் மண்ணை அள்ளி போட்ட தேர்வு”…. TNPSC விளக்கம் ..!!

TNPSC தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதா ? என்ற சந்தேகம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இன்றைய காலகாட்டத்தில் வேலை வாய்ப்பானது அனைத்து இளைஞர்களுக்கும் கானல் நீராகவும், துக்கத்தில் வரும் கனவு போன்றும் இருந்து வருகின்றது. எப்படியாவது வேலை கிடைத்து விடாதா ? என்ற ஏக்கத்தில் தான் மாணவர்கள் , மாணவிகள் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களில் குழந்தைகளை கல்வி நிலைய வாசலுக்கு அனுப்பும் முன்பு தலையை அடமானம் வைத்தாவது படிக்க வைப்பேன் உறுதி ஏற்றுக் கொள்கின்றனர். ஏதாவது அரசு வேலை கிடைத்து விடாதா ? எந்த ஒரே சிந்தனை தான் குழந்தையை பெற்றெடுப்பது முதல் திருமணம் செய்து கொடுப்பது வரை இருந்து வருகின்றது.

தாற்போதைய சமூக கட்டமைப்பில் தலையை அடமானம் வைத்தால் கூட வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டு விட்டது. ஒரு மாணவனோ , அல்லது மனைவியோ பள்ளி படிப்பில் இருந்து முதல் மதிப்பெண் எடுத்தாலும் வேலை கிடைக்காது என்ற நிலை தற்போதைய கல்வி சுழல் உணர்த்துகின்றது. எதற்கெடுத்தலும் தகுதி தேர்வு என்று மாணவர்களை தர படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசு ஈடுபட்டு வருகின்றது.

GROUP 4 க்கான பட முடிவு

அரசின் இந்த முயற்சிகள் எந்த அளவு பயனளிக்கும் என்று அண்மையில் நடைபெறும் நிகழ்வுகள் உணர்த்துகின்றது. சமீபத்தில் தேசிய அளவில்  நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடு அம்பலமாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் தற்போது ஒரே முறைகேடு அம்பலமாகியுள்ளது. தமிழக அரசு பணிக்கு நடைபெறும் TNPSC தேர்வில் இந்த முறைகேடு நடந்துள்ளது.

தமிழகத்தில் அரசு வேலை என்றால் மாணவர்கள் நம்பி இருக்கும் ஒரே கதவு TNPSC தேர்வு தான். இதில் அறிவிக்கப்படும் ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் பங்கேற்பது இதன் தாக்கத்தை மக்களுக்கு உணர்த்தும். அந்த வகையில் அண்மையில் TNPSC குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 5,575 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 16,29,865 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் அரசு வேலை கனவில்  பங்கேற்றவர்களின் கனவுகளுக்கு மண்ணை அள்ளிப்படும் வகையில் தற்போது இந்த தேர்வு முறைகேட்டு புகாரில் சிக்கியுள்ளது.இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு தேர்வு மையத்தில் எழுதிய மாணவர்கள் வரிசையாக 100 இடங்கள் பெற்றுள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அங்குள்ள  ராமேஸ்வரம் , கீழக்கரை பகுதி தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் இந்த முன்னிலை பட்டியலில் இருந்து வருகின்றனர்.

எனவே இந்த இரண்டு தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. அது எப்படி இந்த இரண்டு தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவைகளை மட்டும் முன்னிலை வகிக்க  முடியும் என்று பல்வேறு மையங்களில் தேர்வு எழுதிய தேர்வர்களின் சந்தேகமாகவே இருக்கின்றது. இதற்க்கு பதிலளித்த TNPSC , முழு ஆவணங்களை சரி பார்த்த பின் இது குறித்து விளக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Categories

Tech |