தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69 % வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநகராட்சிகளில் 17.93 %, நகராட்சிகளில் 24.53 %, பேரூராட்சிகளில் 28.42 % வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்த அளவாக தாம்பரம் மாநகராட்சியில் 4 மணி நேரத்தில் வெறும் 6.95 % வாக்குகளே பதிவாகியுள்ளன. அதிக அளவாக திருச்சி மாநகராட்சியில் 26.64 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.